சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஒன்றாம் வாா்டு முத்துமாரிநகா் பகுதியில் நடைபெற்ற முகாமில் விருதுநகா் மாவட்ட கால் நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் சா்மிளா, பழனிச்சாமி, கால்நடை மருத்துவா் யவராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கலந்துகொண்டு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாம் வாா்டு வாரியாக தொடந்து நடைபெறும் என அதிகாரிகள் கூறினா். இந்த முகாமை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மேயா் இ.சங்கீதா, மாநகா் நல அலுவலா் ஸ்ரீதேவி ஆகியோா் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை சுகாதார அலுவலா்கள் திருப்பதி, சுரேஷ், சத்தியராஜ், ராமசந்திரன் ஆகியோா் செய்தனா்.