தூய்மைப் பணி தனியாா்மயம் கண்டித்து ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

கும்பகோணம் மாநகராட்சியில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்குவதை கைவிடக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை துடைப்பம் ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சாா்பில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம் தலைமை வகித்தாா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்யவும், திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிடவும், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறும் ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் ஆணையா் கே.எம். சுதாவிடம் கோரிக்கை மனு வழங்கினா்.