ஹைதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ!

Wait 5 sec.

அமெரிக்காவின் அட்லாண்டா அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் மொராக்கோவும் ஹைதியும் மோதின. இந்தப் போட்டியில் மொராக்கோ 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு மொராக்கோ அணி தேர்வாகியுள்ளது. முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ சாதனை படைத்திருந்தது. அட்லாண்டா அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொராக்கோ சார்பாக அஷ்ரஃப் ஹகிமி 39ஆவது நிமிஷத்திலும் இஸ்மாயில் சைபாரி 45+1ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள். ஹைதி அணிக்கு 10ஆவது நிமிஷத்தி ஓன் கோல் கிடைக்க, 43ஆவது நிமிஷத்தில் வில்சன் இசிடோர் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் 2-2 என சமநிலையில் இருந்தது.இரண்டாம் பாதியில் மொராக்கோவின் 78ஆவது நிமிஷத்தில் சூஃபியான் ரஹிமி, 89ஆவது நிமிஷத்தில் ஜெஸ்ஸிம் யாசின் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் மொராக்கோ 4- 2 என வென்றது.குரூப் சி பிரிவில் மொராக்கோ, பிரேசில் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஹைதி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி, வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா!Soufiane Rahimi and Gessime Yassine help Morocco rally to beat Haiti 4-2