இருண்ட வரலாற்றை நாடு மறக்கக்கூடாது: அவசரநிலை குறித்து கல்வி அமைச்சர் பேச்சு!

Wait 5 sec.

இருண்ட வரலாற்றை நாடு மறக்கக்கூடாது என்று அவசரநிலை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) புதிய பாடத்திட்டத்தின்படி, ”சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்” (Understanding Society: India and Beyond) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் அவசரநிலை குறித்த தகவல்கள் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது:என்சிஇஆா்டி சரியானதைச் செய்துள்ளது. அவசரநிலை போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. ஆகையால், வருங்கால சந்ததியினர் அவசரநிலையின் இருண்ட செயல்களை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் என்சிஇஆா்டி இந்தப் பாடத்தை அறிமுகம் செய்துள்ளது.அவசரநிலை என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. தனிநபரின் அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக அரசியலமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த இருண்ட வரலாற்றை நாடு மறக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின்படி, குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!Union Education Minister Dharmendra Pradhan stated on Thursday (June 25) that the country should not forget the dark history of the Emergency.