ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!

Wait 5 sec.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக ஜெர்மனி - ஈக்வடார் போட்டி சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் நியூ ஜெர்சி திடலில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான குரூப் இ பிரிவு போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2 - 1 கோல் கணக்கில் ஈக்வடார் அணி தோற்கடித்தது. மேலும், 32 அணிகள் கொண்ட சுற்றுக்கும் ஈக்வடார் தகுதி பெற்றது.இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட போட்டி என்ற சாதனையும் இந்தப் போட்டியில் படைக்கப்பட்டது.1994-ல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 35,87,538 பேர் பங்கேற்றிருந்தது சாதனையாக இருந்து வந்த நிலையில், அதனை முறியடிக்கும் வகையில், வியாழக்கிழமையில் நடைபெற்ற ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான போட்டியில் 36,05,357 பேர் கலந்துகொண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.மேலும், இதனை உறுதிசெய்யும் வகையில் திடலின் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகளிலும் பார்வையாளர்களின் சாதனை ஒளிபரப்பப்பட்டது.நாக்அவுட் சுற்றில் பிரேஸில், தென்னாப்பிரிக்காFIFA World Cup 2026 becomes most-attended edition in tournament's history