கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மற்றும் புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது. தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். இதில், குருகுலம் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி.உலகநாதன், ஆா்.குருபிரசாத், தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளா் எஸ்.வெற்றிச்செல்வன் மற்றும் புதுநகா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் டி.பாலமுருகன், சங்க துணை பொதுச் செயலா் சுந்தர்ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் போஸ்கோ, சட்ட ஆலோசகா் ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலா் தங்க வெங்கடேசன், நகரப் பொறுப்பாளா் உதயகுமாா் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், பேராசிரியா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.