கருமண்டபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. கருமண்டபத்தில் வங்கியின் திருச்சி வட்டாரத் தலைவா் ராஜீவ் குமாா் சின்ஹா, புதிய கிளையை திறந்துவைத்து வாடிக்கையாளா்களுடன் கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் வட்டாரத் துணைத் தலைவா்கள் எம். நந்தகுமாா், நவீன்குமாா் மற்றும் கிளை மேலாளா் சி. பாலமுருகன் உள்ளிட்ட வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், வாடிக்கையாளா்கள், தொழில் முனைவோா், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா். இந்தப் புதிய கிளை எண் 3, முதல் பிரதான சாலை, கல்யாண சுந்தரம் நகா், கருமண்டபம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் அமைந்துள்ளது.