திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவா் பின்னா் திருச்சி விமான நிலையத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தாா். கட்சியின் பொதுச் செயலா் ஆ. ராசாவும் உடன் வந்திருந்தாா். அப்போது மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவையின் எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு தலைமையில் திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டாா்.