போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு

Wait 5 sec.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் ச. ஜோசப் விஜய் பங்கேற்றார்.சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.மேலும், மாரத்தானை தொடக்கி வைத்ததுடன், மக்களோடு மக்களாக முதல்வர் விஜய்யும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் ஆகியோரும், டிஜிபி, காவல் ஆணையர், தலைமைச் செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.Tamil Nadu CM Vijay flags off ‘Start Run, Stop Drugs’ awareness run on International Day against Drug Abuse