விருதுநகரில் இன்று நடைபெற்ற விளையாட்டுத் துறை தொடர்பான நிகழ்ச்சியில் என் பெயர்தான் முதலில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது.விழாவுக்கான பேனரில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற நிலையில், தன்னுடைய பெயர்தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும், ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் வைத்தீர்கள் என்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்த மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.