என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

Wait 5 sec.

தேசிய தேர்வு முகமை, (என்டிஏ) ஊழலின் சின்னமாக விளங்குகிறது என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம் ஜான், வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து ரோஜி எம் ஜான் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கடந்த பத்தாண்டுகளில் 89 வினாத்தாள் கசிவு மற்றும் 48 மறுதேர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் சின்னமாக என்டிஏ மாறியுள்ளது. அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ-ல் ஏற்பட்ட தேர்வுத்தாள் மதிப்பீடு முறைகேடு ஆகியவை தொழில்நுட்பக் கோளாறுகளால் நிகழ்ந்தவை அல்ல; மாறாக மத்திய கல்வித் துறையில் நிகழ்ந்த சீர்கேட்டை அவை சுட்டிக் காட்டுகிறது.லட்சக்கணக்கான மாணவர்களின் கடின உழைப்பை தேர்வு மாஃபியாக்களிடம் மத்திய அரசு அடமானம் வைத்துள்ளது. டெலிகிராம் செயலியை முடக்கியதால் மட்டும் இழந்த நம்பகத்தன்மை திரும்ப வராது. மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்துங்கள் என்று ரோஜி எம் ஜான் குறிப்பிட்டுள்ளார்.வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடிKerala Education Minister Roji M. John stated on Thursday (June 25) that the National Testing Agency (NTA) stands as a symbol of corruption.