நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் போஸ்டர் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர். THE OG SWAG ️#DharmanThe Making of the First Look#KettaPaiyanSir#SuperstarRajinikanth #KamalHaasan@rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav… pic.twitter.com/VtJbo7ggTg— Raaj Kamal Films International (@RKFI) June 25, 2026 இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டருக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், மருத்துவர் வேடத்தில் ரஜினி போஸ் கொடுக்கும் காட்சி கவனம் பெற்று வருகிறது. மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!A video showing the making of the poster for the film Dharman, starring actor Rajinikanth, has been released.