வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

Wait 5 sec.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்வது தொடர்பான பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, எரிபொருள் நிறுவனங்கள், சிலிண்டருக்கு முன்பதிவு இடைவெளியை 25 நாள்கள் மற்றும் 45 நாள்களாக நிர்ணயித்திருந்தன.மேலும், நாட்டில் உள்ள 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (அதாவது 'இரட்டை இணைப்பு கூடாது') என்ற கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட விதிமுறையில், இண்டேன் (Indane), ஹெச்பி (HP) அல்லது பாரத் (Bharat) ஆகிய நிறுவனங்களில் எதில் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தாலும், குழாய் மூலம் எரிவாயு இணைப்புப் பெற்றுவிட்டால், இந்திய வீட்டு உபயோக வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி (LPG) இணைப்பை ரத்து செய்வதற்கு அரசு 30 நாள்கள் கால அவகாசத்தை வழங்குகிறது.இது தொடர்பாக 30 மற்றும் 90 நாள்கள் அவகாசம் குறித்து வெளியான அறிவிப்புகளில் மக்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 30 நாள்கள் அவகாசம் எதற்கு?தற்போது பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் நுகர்வோர் தங்கள் எரிவாயு சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அந்த விதி கூறுகிறது. உதாரணமாக, ஜூன் 25 அன்று எரிவாயு குழாய் மூலம் இணைப்பைப் பெற்றால், சிலிண்டர் இணைப்பை ரத்து செய்வதற்கு 30 நாள்கள் அவகாசம். இந்த உதாரணத்தின்படி, அதற்கான காலக்கெடு ஜூலை 25 ஆகும்.90 நாள்களாக அவகாசம் எதற்கு? எரிவாயு சிலிண்டர் தொடர்பான 90-நாள் விதிமுறை ஒன்ற வெளியாகியிருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படக் காரணம்.இது குறித்து மார்ச் 24 அன்று வெளியான அறிக்கையில், மக்கள், தங்கள் பகுதியில் குழாய் வழி இயற்கை எரிவாயு வசதி இருந்தால், அனைத்து சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களும் பிஎன்ஜி இணைப்பிற்கு மாற வேண்டும் என்று அரசு அறிவித்தது. அவ்வாறு மாறுவதற்குத்தான் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால், எரிவாயு சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை உள்ளது.ஒருவர் வீட்டில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புக் கிடைத்துவிட்டால், புதிதாக எரிவாயு உருளையை முன்பதிவு செய்யக் கூடாது. இதன் மூலம், கிராமப் பகுதிகளில் அதிகம் எரிவாயு உருளை தேவைப்படும் குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்களுக்குத்தான் உண்மையில் எரிவாயு மானியம் கிடைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சிலிண்டர் விநியோகத்துக்கு ஓடிபி அவசியம்!புதிய விதிமுறைப்படி, எரிவாயு உருளையை முன்பதிவு செய்தவர்களுக்கு அதனை விநியோகம் செய்யும்போது ஓடிபி பெற்று அதனை தெரிவிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.எனவே, எல்பிஜி வாடிக்கையாளர்கள், தங்களது எல்பிஜி கணக்குடன் சரியான செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பிரதமரின் உஜ்வாலா திட்டம்பிரதமர் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் இகேஒய்சி உறுதி செய்ய வேண்டும். செயலிகள் மூலமாகவும் இதனை செய்யலாம். Changes to cylinder booking coming from July 1st! Is it good news?