தமிழக மின் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும், இனி கட்சி நிதி இல்லாமல் பணி நியமனங்கள் நடைபெறும், இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.தமிழக மின்துறையின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டு விவரங்களை விளக்கிக் கூறினார்.அதில், தமிழக மின்துறையால் தொடங்கப்பட்டு பாதியில் உள்ள திட்டங்களை முடிக்க ரூ.8 ஆயிரம் கோடி தேவை. உப்பூர் மின் நிலையம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரூ.9 ஆயிரம் கோடியில் 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 2000-ஆம் ஆண்டு மின் வாரிய ஊழியர்கள் எண்ணிக்கை 99,481. இபபோது 76,174.மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவை 20,321 மெகாவாட், மாநிலத்தின் மின்சார உற்பத்தி 3,495 மெகாவாட்பணிமாற்றம் வெளிப்படையாக நடக்கும், மின் துறையில் சிக்கனமாக செலவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.ரூ.215 கோடியை மிச்சப்படுத்தும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.பணி உயர்வும் நியாயமாக நடக்கும். மின் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கும்.மின் கட்டண உயர்வால் 5 ஆண்டுகளில் நுகர்வோர் வளர்ச்சி குறைந்துள்ளது. மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.எனவே, இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். No electricity tariff hike this year Nirmal Kumar announces.