எந்த கோயிலில் என்ன விசேஷம்! கும்பாபிஷேகம் முதல் ஜெயந்தி விழா வரை!

Wait 5 sec.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் கிராமம், திம்மம்பாளையம் புதூர், செல்வ கணபதி திருக்கோயிலில் ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது.* நாகை மாவட்டம், திருக்குவளை அருகில் சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்) அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்வர்ண ஸ்தாபனேஸ்வர ஸ்வாமி, ரெங்கநாயகி சமேத ரெங்கநாதர் திருக்கோயில்களின் மகாகும்பாபிஷேகம், மகாசம்ப்ரோக்ஷணம் ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிமுதல் 10.30}க்குள் நடைபெறுகிறது. * சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, பார்சன் நகரில் ஓம் ஸ்ரீ மகாபெரியவா சத்சங்கம் டிரஸ்ட் ஏற்பாட்டில் ஆனி மாத அனுஷ மகோத்ஸவம் ஜூன் 27}ஆம் தேதி பூஜை, ஹோமங்கள் வைபவங்களுடன் காலை 8 மணிமுதல் நடைபெறுகிறது.* திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் தேதியூர் கிராமத்தில் உள்ளஅருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் 11}ஆவது வருட ஸம்வத்ஸரா அபிஷேகம் ஜூன் 27}இல் சிறப்புஅபிஷேகம், பூஜை, ஹோமங்கள் போன்ற வைபவங்களுடன் காலை 8 மணிமுதல் தொடர்ந்து நடைபெறுகிறது.* தூத்துக்குடி மாவட்டம், விட்டலாபுரம் பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா, பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 27 , மாலை 5 மணிமுதல் நடைபெறுகிறது. * தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஜூன் 28}ஆம் தேதி இரவு 6 } 8 மணிக்கு பெரியநாயகி அம்மன் சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. * திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வர சுவாமி கோயிலில் ஜூன் 28 அன்று உழவாரப்பணி நடைபெறுகிறது.* திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆனித் தேரோட்டம் ஜூன் 28, காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது. * தஞ்சாவூர், மேல அலங்கம், அருள்மிகு முருகன் ஆஸ்ரமத்தில் அருணகிரிநாதர் விழாவை முன்னிட்டு ஜூன் 29 காலை 9 மணியளவில் முருகனுக்கும், வள்ளி}தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும், குரு லிங்கமாய் விளங்கும் சித்தர் சுவாமிக்கும் திருப்புகழ் பாடி, அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.* சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், தெத்திகிரிப்பட்டி அகத்தியர் நகர் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அமைந்துள்ள சுகபிரம்ம மகரிஷி சந்நிதியில் ஜெயந்தி விழா ஜூலை 2}இல் சிறப்புஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனைகளுடன் காலை 10 மணிமுதல் தொடர்ந்து நடைபெறுகிறது.* திருவந்திபுரம் - பண்ருட்டி பிரதான சாலையில் பில்லாலி தொட்டியில் உள்ள சுகப்பிரம்ம மஹரிஷி அருட்பீடத்தில் ஜூலை 2-ஆம் தேதி ஜெயந்தி விழா காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது.