திருமணம், விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன?

Wait 5 sec.

நடிகை த்ரிஷா வழக்கமான தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியுலகில் அதிகம் பேசமாட்டார். தன்னுடைய நடிப்பு, தான் நடித்த படம் மட்டுமே மக்களால் பேசப்பட வேண்டும் என்று விரும்புவார்.நேர்காணல், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மைக் கிடைத்தாலும் தேவையற்ற பேச்சுகளை பேசாமல் நடிப்பு, சினிமா பற்றி ஒரு சில வார்த்தைகளுக்குள் நச்சென பேசி முடித்து விடுவார்.படிப்பு, மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் த்ரிஷா. திரைத்துறையில் பல ஆண்டு காலமாக கதாநாயகியாக இருக்கும் நடிகை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். அந்த சாதனை அவ்வளவு எளிதாக படைக்கப்பட்டிருக்குமா என்ன? எத்தனையோ அனுபவங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள், அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். பெரிதாக சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்து வந்தவர்தான் த்ரிஷா.சில நேரங்களில் அவர் பொது நிகழ்ச்சி போன்றவற்றில் பேசும்போது கல்யாணம், விவாகரத்து குறித்தெல்லாம் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை எந்த விதத்திலும் நாடகத் தன்மை இல்லாமல் உண்மையான வார்த்தைகளாகவே அமைந்திருந்தன.திருமணம் அவசியமில்லை?திருமணம்தான் ஒவ்வொரு மனித வாழ்வின் மிக முக்கியம் என்று இந்த சமூகம் சொல்லி வந்தாலும்கூட, உண்மையிலேயே ஒரு வாழ்வில் திருமணம் என்பது தவிர்க்கவே முடியாதது என்பதை தான் நம்பவில்லை என்றே த்ரிஷா கூறியிருக்கிறார். தக் லைஃப் படத்தின் புரோமஷனல் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷாவிடம் திருமணம் பற்றி கேட்டபோது, அப்போது 42 வயதாக இருந்த நடிகை த்ரிஷா, திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நடந்தால் ஒன்றும் பிரச்னையில்லை, ஆனால், நடக்கவில்லை என்றாலும் நல்லதுதான் என்று பதிலளித்திருந்தார்.கையில் திருமண மோதிரம் அணிவதே, வாழ்வின் நிறைவுப் புள்ளி என்ற வாதத்தை த்ரிஷா கூறியிருந்தார். இப்போதைய தலைமுறையின் கருத்தை த்ரிஷாவும் பதிவு செய்கிறார்.விவாகரத்தில் விருப்பமில்லைவிவாகரத்து என்பது காதலிசம் இல்லை, அது நடைமுறைவாதம். காதலில் விழுவது, திருமணம் செய்வது, பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிவது போன்ற உறவை தான் விரும்பவில்லை என்கிறார். காதலித்து ஒன்றாகவே வாழ்ந்து, வயதான காலம் வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாகவும் 2016ஆம் ஆண்டு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.நான் என்னுடைய வாழ்நாள் இறுதிவரை இவருடன் வாழ விரும்புகிறேன் என்று நம்பிக்கை வந்து, அவருடன் சேர்ந்து வாழ வேண்டும், விவகாரத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை திருமணத்துக்குப் பிறகு விவகாரத்து கோரும் ஆள் நான் இல்லை என்று குறிப்பிட்ட அவர், திருமணம் செய்வதற்கு முன்பு 100 முறைகூட யோசிப்பேன், ஆனால் ஒருபோதும் ஒருவரை புண்படுத்தி வாழவோ, துக்ககரமான வாழ்வை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று தெளிவான பதிலை குறிப்பிட்டுள்ளார்.What did Trisha say about marriage, divorce, Dating?