வேளாங்கண்ணி விரைவு ரயில் மீண்டும் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணி காரணமாக வேளாங்கண்ணி விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், வருகின்ற ஜூலை 1 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி விரைவு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வேளாங்கண்ணியிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி புறப்படும் ரயில் எண். 16176, மறுநாள் (ஜூலை 1) காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 1 முதல் சென்னை எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு புறப்படும் ரயில் எண். 16175, இரவு 9 மணிக்கு புற்ப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. Back to its home station!Train No. 16175/16176 Chennai Egmore – Velankanni Express is now restored to originate and terminate at Chennai Egmore Railway Station. Effective 30th June & 1st July 2026Plan your journey accordingly.#SouthernRailway #IndianRailways #Chennai… pic.twitter.com/W0YblMMwrF— Southern Railway (@GMSRailway) June 26, 2026Velankanni Express resumes operations from Egmore!முதல்வர் விஜய் உத்தரவு! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து!