மாதவிடாய் சுழற்சி நிறைவு: 3 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் திறப்பு!

Wait 5 sec.

குவாஹாட்டியில் உள்ள காமாக்யா தேவி கோயில் மூன்று நாள்களுக்குப் பின்னர் ஜூன் 26(இன்று) காலை நடை திறக்கப்பட்டது. அஸ்ஸாமின், குவாஹாட்டியில் உள்ள நீலாச்சல் மலையின் உச்சியில் அமைந்துள்ளது காமாக்யா கோயில். இந்தக் கோயிலில் புகழ்பெற்ற அம்புபாச்சி திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் அன்னை காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டு காமாக்யா கோயிலின் நடை ஜூன் 22-ம் தேதி இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று அதிகாலை கோயிலில் தூய்மைப்படுத்தும் பணி நடத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காகக் கோயிலின் நடை திறக்கப்பட்டது. அன்னை காமாக்யா தேவியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் எக்ஸ் தளப் பதிவில், காமாக்யா கோயிலின் நடை இன்று காலை திறக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையைத் தரிசித்து வருனிற்னர். எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிப்பார்கள் என நம்பப்படுகிறது. அன்னை காமாக்யா கோயிலில் நடைபெறும் அம்பூபாச்சி நிகழ்வின் பின்னணியில் உள்ள அம்சம் இணையற்றது. இது அஸ்ஸாமின் நாகரிக பாரம்பரியத்தில் (பெண் சக்தியின் ஆற்றலின்) முக்கியத்துத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்று முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இத்திருவிழாவிற்காக நாடு முழுவதிலும் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்குக் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நிகழ்வான இங்கு, கடந்தாண்டு 42 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 7,72,019 பேர் பங்கேற்றனர். 2024-ஆம் ஆண்டில், வெளிநாட்டிலிருந்து வந்த 20 பேர் உள்பட மொத்தம் 7,46,066 பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.Ambubachi Mela ends as Kamakhya temple doors reopen for devotees .அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!