மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

Wait 5 sec.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார். தேமுதிக பொருளாளரும் எம்.பி.யுமான சுதீஷும் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவரது எக்ஸ் பக்கத்தில், "திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை இன்று (25-06-2026) ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி.யும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 10 இடங்களில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் அவருடைய பேச்சு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான #MKStalin அவர்களை இன்று (25-06-2026) ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், #தேமுதிக . பொதுச் செயலாளர் திருமதி #பிரேமலதாவிஜயகாந்த் MLA அவர்களும், தே.மு.தி.க. பொருளாளர் திரு. #LKசுதீஷ் MP அவர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப்… pic.twitter.com/5oKjmzse3i— Premallatha Vijayakant (@PremallathaDmdk) June 26, 2026Premalatha Vijayakanth meets M.K. Stalinநகரங்களில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய்? முதியோரை அதிகம் பாதிக்கிறதா?