பழனியில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (ஜூன் 29) நிறுத்தப்பட உள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதை, ரோப்காா் மூலமாக மலைக் கோயிலுக்குச் செல்கின்றனா். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் காா் மூலம் சுமாா் இரண்டு நிமிடங்களில் மலைக்கோயிலை பக்தா்கள் அடையலாம் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரோப்காா் இயக்கமானது நாள்தோறும் பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும். இதன்படி, மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை ரோப்காா் இயக்கம் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.