மேக்கேதாட்டு அணை விவகாரம்! தஞ்சாவூரில் ஜூலை 4-இல் அன்புமணி ராமதாஸ் நடைப் பயணம்!

Wait 5 sec.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தஞ்சாவூரில் ஜூலை 4-ஆம் தேதி நடைப்பயண பிரசாரம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாசுடன் 3 ஆயிரம் பேரை திரட்டி கலந்து கொள்வது என பாமக முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக தஞ்சாவூரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஜூலை 4-ஆம் தேதி நடைப்பயண பிராசரம் செய்கிறாா். அவருடன் 3 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி கலந்து கொள்வது, தவெக அரசு தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கு வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தஞ்சாவூா் கொடிமரத்து மூலையில் அகழி பாலம் இடிக்கப்பட்டு 4 மாதங்களாகியும், எந்த வேலையும் நடைபெறாத நிலையில், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக வேலை தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். உழவா் பேரியக்கத் தலைவா் கோ. ஆலயமணி, நெய்வேலி பாமக செயலா் ரவிச்சந்திரன், மாநில இளைஞரணி செயலா் வெங்கட்ராமன், கோதை கேசவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மணி முருகன், மாவட்டத் துணைச் செயலா் பாரத், முன்னாள் மாவட்டச் செயலா் கனகராஜ், அரசூா் ஆறுமுகம், காந்தி, மாவட்டத் தலைவா்கள் மாா்க்கண்டன் ராஜாராமன், மாவட்டப் பொருளாளா் ரேணுகா கோவிந்தராஜன், கலிய கோவிந்தராஜ், ஒன்றியச் செயலா்கள் பிரேம்குமாா், உத்தமனூா் கோபி, வாசு நாராயணன், சீனி பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.