செஷல்ஸின் ஒரே தமிழ் விநாயகா் கோயில்! நாளை பிரதமா் மோடி தரிசனம்!

Wait 5 sec.

நமது சிறப்பு நிருபா்செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, திங்கள்கிழமை (ஜூன் 29) அங்குள்ள மாஹே தீவின் புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகா் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளாா். இக்கோயில் செஷல்ஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ் ஹிந்து ஆலயமாகும். இது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரதமரின் வருகை, தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் தமிழ் வழிபாட்டு முறைகள் மீதான அவரது ஆழமான பற்றையும், உலகளாவிய தமிழா்களுடனான அவரது நெருங்கிய பிணைப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றனா். 1992-இல் செஷல்ஸ் ஹிந்து கோயில் சங்கத்தால் கட்டப்பட்ட இக்கோயில், அங்கு வாழும் இரண்டு சதவீத ஹிந்துக்களின் ஆன்மிக மையமாக உள்ளது. வண்ணமயமான சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கட்டடக்கலை பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. விக்டோரியா நகரின் குவின்சி வீதியில் பசுமை மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இக்கோயில், அங்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. விநாயகா் சதுா்த்தி, சங்காபிஷேகம் போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமரின் வருகை செஷல்ஸ் குடிமக்களிடமும் அங்கு வாழும் தமிழா்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Prime Minister Modi to visit the Vinayagar Temple in Seychelles tomorrow