திரைக் கதிர்

Wait 5 sec.

தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார் மகள் சுப்ரியாசுலேயின் மகள் ரேவதிக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அவர் தொழிலதிபர் சரங் லகானியைத் திருமணம் செய்தார். இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். நடிகர் ஷாருக்கானும் இதில் கலந்து கொண்டார். அதோடு மிகவும் விருப்பமான பாடல்களுக்கு நடனமும் ஆடினார். 'குச் குச் ஹோதா ஹை' படத்தில் இருந்து தனது புகழ்பெற்ற 'கோய் மில் கயா' பாடலுக்கு ஷாருக்கான் நடனமாடுகிறார். இந்தக் காணொலியை பாடகர் ராகுல் வைத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.சூர்யா 'கருப்பு' வெற்றி சூர்யாவை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இயக்குநர்கள் வெங்கி அட்லூரி, ஜித்து மாதவன் படங்களை அடுத்து 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைகிறார். மேலும், விரைவில் தனது 50-ஆவது படத்தை நெருங்குகிறார் சூர்யா. இந்தப் படத்தை நெல்சன் இயக்குவார் என்ற பேச்சு இருக்கிறது.'ஜெயிலர் 2', கமல் - ரஜினி இணையும் படம் என பிஸியாக இருக்கும் நெல்சன், அவற்றை முடித்துவிட்டு சூர்யாவின் படத்துக்கு வருவார் என்கிறார்கள். அடுத்த இரு வருடங்களுக்கு தனது கால்ஷீட்டை பிஸியாக வைத்திருக்கிறார் சூர்யா.சிம்பு 'அரசன்' படத்தில் சிம்புவுக்கு மூன்று வித தோற்றங்கள் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகளை ரெடி செய்த வெற்றிமாறன், அதை தயாரிப்பாளர் தாணு, சிலம்பரசன் ஆகியோருக்குத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார். படத்தைப் பார்த்த சிலம்பரசனுக்கு மிக்க மகிழ்ச்சி.படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, நடிகர்களின் நடிப்பு, மொத்த திரை வெளிப்பாடு ஆகியவை அவரை வெகுவாகக் கவர்ந்துவிட, அடுத்து வரும் கெட்டப்பில் இன்னும் மெனக்கெடத் திட்டமிட்டு வருகிறார். சமீபகாலமாகத் தன் வேலை, பொறுப்பு, நீண்டகாலத் திட்டமிடல்கள் மீது முழு கவனத்துடன் செயல்பட்டு வருவதாக படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளது.கௌதமி சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கௌதமி, 'இந்தப் படத்தை நான் ஒப்புக் கொண்டதன் முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குநர் நந்தினியும், தயாரிப்பாளர் சமந்தாவும்தான். அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள்.அவங்க யார் என்பது அவங்களோட வேலையின் மூலம் நமக்குத் தெரியும். இந்தப் படத்துல இவங்களோட வேலை செய்வது என் வழியில நான் இவர்களுக்குத் தெரிவிக்கிற பாராட்டு. இந்தப் படத்துக்குப் பின்னாலும், இந்தக் கதை படமா மாறுவதற்குப் பின்னாடி இருக்கிற ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு'' என்றார்.