கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஒலி பெருக்கி அமைப்பாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருநாவலூா் அருகேயுள்ள கொரட்டூா் புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் சி.திலகா் (24). இவா் ஒலி பெருக்கி மற்றும் வாடகைப் பாத்திரக்கடை நடத்தி வந்தாா். கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் திலகா் காணப்பட்டு வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் திலகா் தூக்கிட்டுக் கொண்டாா். இதுகுறித்து அறிந்த குடும்பத்தினா் திலகரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.