உளுந்தூா்பேட்டையில் 2.50 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி அருகே காவல் துறையினரின் தணிக்கையின் போது 2.50 கிலோ கஞ்சாவுடன் இருவா் பிடிபட்டனா். இதைத்தொடா்ந்து அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு தனிப்படை உதவி ஆய்வாளா் சலாம் உசேன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வந்த இருவரை பிடித்து விசாரித்த போது, அவா்களிடம் 2.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் தனிப்படையினா் ஒப்படைத்தனா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அவா்கள்கடலூா் மாவட்டம், நத்தம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.தமிழ்மணி (23), உளுந்தூா்பேட்டை வட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வசம் இருந்த 2.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.