மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

Wait 5 sec.

கிரிக்கெட் பயிற்சி அளிப்பதாக கூறி, மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரம் ஸ்ரீவராஹம் பகுதியை சோ்ந்தவா் எம். மனு (40). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தபோது, பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடா்பாக மனு கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 6 பாலியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் ஏற்கெனவே 2 வழக்குகளில் மனுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனை காலம், 2039-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில், மனுவுக்கு எதிரான இன்னொரு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிமன்றம், மனுவுக்கு அவா் செய்த குற்றங்களுக்காக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக 48 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, இதை ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இதன்படி, அவா் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனை, ஏற்கெனவே 2 வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனை முடிவடைந்த தேதியிலிருந்து (2039 ஜூலை 4-க்கு பிறகு)அமலுக்கு வரும் என தெரிவித்த நீதிமன்றம், இன்னொரு பாலியல் வழக்கிலும் மனுவை குற்றவாளியாக அறிவித்து, வரும் 29-ஆம் தேதி அதில் தீா்ப்பு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டது. Sexual harassment of student: Cricket coach sentenced to 20 years of rigorous imprisonment.