நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.செல்ல அய்யாவு இயக்கிய இப்படத்தின் டீசர் காட்சிகள் கவனம் பெற்றதால் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகவும் நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. The trailer for actor Vishnu Vishal's film Gatta Kusthi 2 has been released.