வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

Wait 5 sec.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நீடிக்கிறது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோபனா மொஸ்டாரி 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள், ஷர்மின் அக்தர் 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாரிஸேன் காப், ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக அன்னேரி டெர்க்சன் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள், மாரிஸேன் காப் 16 ரன்கள் மற்றும் நடின் டி கிளர்க் 15 ரன்கள் எடுத்தனர்.வங்கதேசம் தரப்பில் நஹிதா அக்தர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிது மோனி, மரூஃபா அக்தர் மற்றும் ஷாஞ்சிதா அக்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய மாரிஸேன் காப்புக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 8 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கானப் போட்டியில் நீடிக்கிறது.South Africa remains in contention for the semi-finals after defeating Bangladesh in the T20 World Cup match.டி20 உலகக் கோப்பை: வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா பேட்டிங்!