நச்சிந்தி மச்சானே... மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்!

Wait 5 sec.

நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார்.இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, நச்சிந்தி மச்சானே என்கிற பாடல் வெளியாகியுள்ளது. விஷால், அஞ்சலி இணைந்து ஆடியுள்ள இப்பாடலை ஏகாதசி எழுத, மங்க்லி மற்றும் வேல் முருகன் ஆகியோர் பாடியுள்ளனர். The second song from actor Vishal's movie Magudam has been released.