இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைக்கிறது! செஷல்ஸ் அவையில் மோடி உரை!

Wait 5 sec.

இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் இணைப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைப்பதில் இந்தியப் பெருங்கடல் பாலம் போன்று செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமைமுதல் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.தில்லியில் இருந்து புறப்பட்டு விக்டோரியா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமா் மோடியை அதிபா் பேட்ரிக் மற்றும் உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனா். விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது தேசிய தின விழா திங்கள்கிழமை (ஜூன் 29) நடைபெறவுள்ளது. அதிபா் பேட்ரிக் அழைப்பின்பேரில், இந்த விழாவில் பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளாா்இதனிடயே, தனது பயணத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார்.அந்நாட்டு அவையில் பிரதமர் மோடி பேசியதாவது:செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையோடு உங்கள் முன்பு நிற்கிறேன். இதன்மூலம், 140 கோடி மக்களின் அன்பு நிறைந்த வாழ்த்துகளை இந்த அவைக்கு கொண்டுவந்துள்ளேன். பிரதமராக பதவியேற்ற பிறகு 2015 ஆம் ஆண்டு நான் சந்தித்த இந்தியப் பெருங்கடலில் உள்ள முதல் நாடு செஷல்ஸ்தான்.இந்தியப் பெருங்கடல் குறித்த பார்வையில் செஷல்ஸ் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதால் நான் இங்கு வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தூதரக உறவுகள் நிறுவப்பட்டதில் இருந்து நமது உறவு தொடங்கவில்லை. 1770 ஆகஸ்ட் முதலே நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடங்கிவிட்டது. இந்தியாவில் இருந்து 5 பேர் கொண்ட குழு கப்பலில் சென்று செயிண்ட் ஆனி தீவுக்குச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பலர் அங்குச் செல்வதற்கான வாய்ப்பு அமைந்தது. இது நவீன செஷல்ஸ் உருவாக வழிவகுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரசாங்கத்தால் உருவானது அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடல் இதனை சாத்தியமாக்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் நம்மை பிரிக்கவில்லை. நம் இருவரையும் இணைக்கிறது. 50வது ஆண்டு சுதந்திர தினத்தை உங்களுடன் கொண்டாட இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி எனப் பேசினார். Indian Ocean does not separate India and Seychelles, it connects us PM Modi historic Seychelles address