சத்தீஸ்கரில் ஹிந்து மதக் கடவுள்களை அவமதித்து காணொலி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொர்க்கத்திலிருந்து பூமிக்கு என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் கிறித்தவ மதக் கடவுளான இயேசுவை ஹிந்து கடவுள்களின் தந்தை என சித்திரித்து ஏஐ காணொலிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட காணொலிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையாகியுள்ளது. இந்தக் காணொலிகளில் ஹிந்து மதக் கடவுள்களான சிவன், விஷ்ணு போன்றவர்களுக்கு இயேசுவே தந்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில காணொலிகளில் இயேசுவிடமிருந்து ராமர் உபதேசம் பெறுவது போன்றும், அனுமனை விட இயேசு சக்திவாய்ந்தவர் என்றும் சித்திரிக்கப்பட்டது ஹிந்து அமைப்புகளிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தக் காணொலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், தர்மசேனை போன்ற பல்வேறு ஹிந்து அமைப்புகள் ராய்ப்பூரில் பெரியளவில் போராட்டங்களை நடத்தினர். மேலும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் திட்டமிட்டே இவ்வாறான காணொலிகளைப் பரப்பி வருவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொலிகள் எங்கிருந்து பதிவேற்றப்பட்டன என்று விசாரணையின் மூலம் தெரியவரும் என்றும் அவை நாட்டின் எந்த மூலையிலிருந்தும் பதிவேற்றப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பதிவேற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். "அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அந்த அதிகாரி கூறினார்.டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் இவ்வாறான காணொலிகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்த சைபர் பிரிவு காவல்துறையினர், ஏஐ தடயவியல் மென்பொருளைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.AI videos claiming Jesus is the father of Hindu gods go viral: Protest in Chhattisgarh!ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு: குற்றவாளியின் வீட்டில் நகை, ஆவணங்கள் பறிமுதல்!