இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்!முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.4️⃣ Overs2️⃣2️⃣ Runs3️⃣ Wickets A performance to remember from debutant Prince Yadav Scorecard ▶️ https://t.co/L8GAMNqUC4#TeamIndia | #IREvIND pic.twitter.com/SHGcDBzKzz— BCCI (@BCCI) June 28, 2026அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி டெக்டார் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெஞ்சமின் காலிட்ஸ் 37 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர். கேப்டன் லோர்கான் டக்கர் 15 ரன்கள் எடுத்தார்.இந்தியா தரப்பில் அறிமுக வீரரான பிரின்ஸ் யாதவ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.Batting first in the second T20 match against India, the Ireland team scored 154 runs for the loss of 8 wickets.வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!