திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், தாராபிஷேகம், கும்ப பூஜை, தீபாராதனை, விமான கலசத்திற்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறுவா், சிறுமிகள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்தனா். இரவு விநாயகா் உற்சவராக மூஷிக வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.