சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

Wait 5 sec.

கபிலா்மலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சியைச் சோ்ந்தவா் சக்திவேல் (42). கட்டட தொழிலாளி. இவா் வேலைக்கு சென்ற பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் பெற்றோா், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சக்திவேலை கைதுசெய்து, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி, நீதிபதி உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.