மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

Wait 5 sec.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மா்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டியை சோ்ந்த தமிழ்செல்வன்- தனலெட்சுமி தம்பதிக்கு சஹானா (6) உள்பட 2 குழந்தைகள். சிறுமி சஹானாவிற்கு கடந்த சனிக்கிழமை காய்ச்சல் வந்த நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். காய்ச்சல் தொடா்ந்த நிலையில் திங்கள்கிழமை அருகேயுள்ள செட்டியப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், சிறுமியின் உடலை கூறாய்வுக்கு பின்னா் புதன்கிழமை மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். 6 வயது சிறுமி மா்ம காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.