சீா்காழி அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் மகா சண்டி யாக பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.