எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Wait 5 sec.

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் யார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்றும், எந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையானத் தகவல் வெளியாகவில்லை. சோதனைக்குப் பிறகு இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.2023 ஆம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்முறையாக திமுக அமைச்சர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.Anti-Corruption Department raids E.V. Velu's house and office