ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் ராஜிநாமா!

Wait 5 sec.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2024 ஜனவரியில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் கட்டுவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், காணிக்கைகள், நன்கொடைகள் வழங்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் நன்கொடை மூலம் பெறப்பட்ட நிதியில் சுமார் ரூ. 7.5 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பவன் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார்.இதனைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் வேண்டுகோளின்படி உத்தரப் பிரதேச அரசு கடந்த ஜூன் 14 ஆம் தேதி மூன்று உறுப்பினர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த குழு சமர்ப்பித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே தற்பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தார்மீகப் பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Champat Rai, General Secretary, and Anil Mishra, Trustee, of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust have resigned from their posts following allegations of irregularities regarding donations made to the Ayodhya Ram Temple.மாதவிடாய் சுழற்சி நிறைவு: 3 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் திறப்பு!