இந்திய கடவுச்சீட்டுக்கான (பாஸ்போர்ட்) கட்டணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 36 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்கான விண்ணப்பக்கக் கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், 60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், அவசரத் தேவைக்கான `தட்கல்' கடவுச்சீட்டின் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.60 பக்கங்கள் கொண்ட புதிய அல்லது மறுவழங்கல் `தட்கல்' கடவுச்சீட்டின் முன்பிருந்த கட்டணத் தொகையான ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் தட்கல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து கட்டண உயர்வும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!The Ministry of External Affairs has increased the fee for Indian passports.