சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு தீடீரென கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காலை முதல் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!Heavy rain is suddenly lashing Chennai and its suburbs tonight (June 25).