மும்பை: கோட்டக் மஹிந்திரா வங்கி 1985 ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கிளைகளையும், 2,500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களையும் கொண்டுள்ளது இந்த வங்கி.கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் வஸ்வானி, தனது மூன்றாண்டு பதவிக்காலம் டிசம்பர் 31, 2026 அன்று முடிவடையும் போது, மீண்டும் அப்பதவியை ஏற்கப்போவதில்லை என்றும், பதவிக்காலம் முடிந்ததும் விலகப்போவதாகவும் தெரிவித்ததையடுத்து, வங்கியின் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.மும்பை பங்குச் சந்தையில், வங்கியின் பங்கு 3.24 சதவீதம் சரிந்து ரூ. 395.75 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது, பங்கின் விலை 3.60 சதவீதம் சரிந்து ரூ. 394.25 வரை சென்றது.நிஃப்டி-யில் இந்த பங்கின் விலை 3.30 சதவீதம் சரிந்து ரூ. 395.50 ஆக முடிவடைந்தன.சென்செக்ஸ் குறியீட்டில் அதிக சரிவைச் சந்தித்த பங்காக இன்று இது அமைந்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13,177.32 கோடி குறைந்து ரூ. 3,93,633.09 கோடியாக சரிந்தது.தனிப்பட்ட காரணங்களுக்காக, டிசம்பர் 31, 2026 அன்று முடிவடையும் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு, மீண்டும் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அசோக் வஸ்வானி நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது வங்கி.Shares of Kotak Mahindra Bank declined over 3 per cent on Monday.பங்குச் சந்தை வீழ்ச்சி: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி... சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிவு!