வெனிசுலா நிலநடுக்கம்: 1,000 பேர் பலி; 70 லட்சம் பேர் பாதிப்பு!

Wait 5 sec.

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியிருக்கலாம் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த ஐ.நா., “ஜூன் 24 அன்று நடைபெற்ற நிலநடுக்கங்களால் இதுவரை 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் கராகஸ் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டதாகவும், இந்தப் பேரிடரால் மிகப்பெரிய பாதிப்பை வெனிசுலா சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. வெனிசுலாவில் புதனன்று ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்களால் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 920-ஐ தாண்டிய நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், 50,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா.வின் உதவிப் பிரிவுத் தலைவர் டாம் ஃபிளெட்சர் தெரிவித்துள்ளார்.பல லட்சம் மக்கள் இடம்பெயர்ர்ந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டோர் பலரும் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகளிடம் ஐ.நா. உதவி கோரியுள்ளது. Venezuela Earthquake: 1,000 Dead; 7 Million Affected!இந்தியா வருகிறார் டிரம்ப்! வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு!