ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

Wait 5 sec.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, மாலை 7.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கனில் 215 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜுர்ம் நகருக்குத் தெற்கில் சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடாகும். குறிப்பாக, அங்குள்ள யூரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் இணையும் இந்து குஷ் மலைத்தொடரில் அதிகம் நிலநடுக்க பாதிப்பு ஏற்படும். முன்னதாக, ஏப்ரல் 12 அன்று 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் பலியாகினர். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 2,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். Earthquake in Afghanistan! Tremors felt as far as Jammu & Kashmir and Delhi!இந்தியா வருகிறார் டிரம்ப்! வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு!