மும்பை: ரூ. 1 விற்பனை வதந்தியால் வணிக வளாகத்திற்கு வெளியே கூடிய பெருங்கூட்டம்

Wait 5 sec.

மும்பையில் ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பரவிய வதந்தியால் வணிக வளாகத்திற்கு வெளியே பெருங்கூட்டம் கூடியது.மகாராஷ்டிர மாநிலம், வணிக வளாகத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் விளம்பர சலுகையாக ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறி விடியோ பலரால் பகிரப்பட்டது. இதனால், கடை திறப்பதற்கு முன்பே ஏராளமான வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்திற்கு வெளியே கூடினர் என்று பாங்கூர் நகர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.நெரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸார் தலையிட்டு, தள்ளுபடி சலுகை எதுவும் இல்லை என்று அறிவிப்புகள் மூலம் தெளிவுபடுத்தினர். அதன்பிறகே கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். A social media rumour about a clothing outlet selling outfits for Rs 1 led to a stamped-like situation outside a mall in suburban Malad on Saturday morning but there was no untoward incident, police said.ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!