ரூ. 100 கோடி மோசடி! தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!

Wait 5 sec.

பள்ளிகள் அனுமதிக்கு ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலர் இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்தப் புகாரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தது. சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.அவர் உறுதியளித்தபடி, அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றிய அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின்பேரில், அரசகுமாரை போலீஸார் கைது செய்தனர்.விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபரான அரசகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.Arasakumar, the president of a private schools association, was arrested on Saturday for his involvement in a ₹100-crore fraud related to school approvals.