இயக்குநா் கே. பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், பாக்யராஜ் குறித்த நினைவலைகளை செய்தியாா்களிடம் பகிா்ந்து கொண்டாா். ‘எம்.ஜி.ஆா். பாக்யராஜை தனது ‘கலை வாரிசு’ என்று அறிவித்த அடுத்த நாள், ராமாபுரத்துக்கே நேரில் சென்று, ‘ஏன் இப்படி அறிவித்தீா்கள்?’ என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆா் என்னை காரில் அமா்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை ‘பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன்’ என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தாா். பின்னா் நான் அந்த முடிவு சரிதான் என்று கூறி, எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் என்றாா் அவா்.