இரண்டாம் பாதியில் கம்பேக்..! முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது காங்கோ!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் உஸ்பெகிஸ்தானை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய காங்கோ அணி அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை 2026க்கு காங்கோ அணி அரை நூற்றாண்டுக்குப் பின்னர் (52 ஆண்டுகள்) தகுதி பெற்று சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அட்லாண்டா திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எல்டர் ஷோமுரோடோவ் 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் உஸ்பெகிஸ்தான் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாம் பாதியில் வெகுண்டெழுந்த காங்கோ அணியினர் 68 (பெனால்டி), 78, 90+1ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள காங்கோ அணியின் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்த காங்கோவின் யோவான் விஸ்ஸா ஆட்ட நாயகன் விருது வென்றார். Yoane Wissa earns the Superior Player of the Match trophy. ✨#FIFAWorldCup #SuperiorPOTM pic.twitter.com/GEripaN23Z— FIFA World Cup (@FIFAWorldCup) June 28, 2026கோல் அடிக்காததால் சமனில் முடித்த போர்ச்சுகல்..! முதலிடத்தைப் பிடித்தது கொலம்பியா! Congo rallies to a 3-1 win against Uzbekistan to seal place in the World Cup knockouts