விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடர், 881 எபிசோடுகளுடன் அண்மையில் நிறைவடைந்தது.மகாநதி தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்திருந்தனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வந்தார். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்த்து வந்தனர்.மகாநதி தொடரில் நடித்த நடிகை லஷ்மி பிரியா - சுவாமிநாதன் இணைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இந்த நிலையில், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவந்த மகாநதி தொடர், விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன், 881 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது.காவேரிக்கு நினைவுத் திருப்பிய நிலையில், விஜய் - காவேரி இணைவதுபோல காட்சியமைக்கப்பட்டு தொடர் நிறைவடைந்தது.மகாநதி தொடரின் 2ஆம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.The Mahanadhi serial, which aired on Vijay TV, concluded with 881 episodes.2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!