அரசன் திரைப்படத்தின் முக்கியமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இடையே, தடைபட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார்.That’s a wrap on one amazing big schedule for #Arasan Time to recharge, recover, see some daylight, and get ready for what comes next. #VetriMaaran @anirudhofficial @theVcreations pic.twitter.com/iAuzE5Nn1P— Silambarasan TR (@SilambarasanTR_) June 26, 2026 மேலும், அரசன் திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இதன் முக்கியமான படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். விடை பெற்றார், அன்புடன் பாக்யராஜ்!The major filming for the movie Arasan has been completed.