லாரி மோதியது! இரு சக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை பலி!

Wait 5 sec.

பேரணாம்பட்டு பத்தலப்பல்லி வனப்பகுதியில், தமிழக - ஆந்திர எல்லையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அண்ணன் தங்கை மீது, லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக - ஆந்திர எல்லைக்குள்பட்ட பத்தலப்பல்லி வனப்பகுதியில் ஒடிசாவில் இருந்து மாட்டு தோல்களை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டை நோக்கி கனரக லாரி வந்து கொண்டிருந்தபோது, அதே வழியாக பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த அனுஷ்கா அவரது அண்ணன் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது, அவர்கள் பின்னால் அதிவேகமாக வந்த லாரி இருவர் மீதும் மோதியதில், லாரி சக்கரத்திற்குள் சிக்கி அண்ணன் - தங்கை பலியாகினர்.இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழக மற்றும் ஆந்திர போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான இடத்தில் விபத்து ஏற்பட்டதால் வி. கோட்டா போலீஸார் இருவரின் உடலை மீட்டு, பலமனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, வி. கோட்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.A brother and sister traveling on a two-wheeler were killed on the spot after a lorry collided with them in the Pathalapalli forest area of ​​Pernambut, along the Tamil Nadu-Andhra border.விழுப்புரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி